மஹாளயத்தில் பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவது

மஹாளய பக்ஷத்தில் வேத பாடசாலை குழந்தைகளுக்கு ஸமாராதனை செய்விப்பதும், பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவதும் மிகவும் புண்ணிய பிரதானம் என்பதற்கு ஏற்ப ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வேத பாடசாலையில் இந்த பக்ஷம் முழுவதும் இந்த கைங்கர்யங்கள் பலராலும் செய்யப்பட்டுள்ளது.

இன்று (21-9-2025) மஹாளய அமாவாஸ்யை முன்னிட்டு பெரிய அளவில் இந்த கைங்கர்யங்கள் நடைப்பெற்றது.

பொது மக்களுக்கு அன்னதானம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

கோசாலை, வேத பாடசாலை முதலியவைகளை முன்னிட்டு பல விதங்களில் கைங்கர்யம் பல ஆஸ்திக அன்பர்கள் செய்துள்ளனர். அவர்களுக்கு எங்களது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
கூடவே அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் உடல்நலம், மன நிம்மதி கிடைக்க பிரார்த்தனை செய்கிறோம்.

குருவருளும் திருவருளும் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.

Scroll to Top