ஸ்ரீ மந்திரபீடேஸ்வரி வேத பாடசாலையில் இன்று சம்ஸ்கிருதப் பரீட்சை நடைபெறுகிறது. இது சித்தூரிலிருந்து (Chittoor) நடத்தப்படும் ஒரு பரீட்சை. இந்த பரீட்சை, கும்பகோணம் ஸ்ரீ மந்திரபீடேஸ்வரி வேத பாடசாலையில் சென்டர் அமைத்து இங்கே நடத்தப்படுகிறது. இதில் நம்ம பாடசாலை வித்யார்த்திகள் மட்டுமல்லாமல், பிற மாணவர்களும், பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் கலந்து கொண்டு எழுதுகிறார்கள். இன்று நம்ம சென்டரில் கிட்டத்தட்ட 40 மாணவர்கள் இந்த பரீட்சையை எழுதுகிறார்கள்.
இந்த பரீட்சையில் பரீட்சயா (परिचयः), அபிக்ஞா(अभिज्ञः), விசக்ஷணா (विचक्षणः) ஆகிய நிலைகள் வரை இன்று எழுதப்படுகிறது.
