பகவத் பாதாள் ஸ்ரீ ஆதி சங்கரர் ஜெயந்தி மஹோத்ஸவம் 2025
புஷ்ப அலங்காரத்துடன் ஸ்ரீ சங்கரர் வீதி ஊர்வலம் பாடசாலை வளாகத்தில் துவங்கி சோலையப்பன் தெரு முழுவதும் வேத கோஷத்துடனும், ஸ்தோத்ர பாராயணம், கோலாட்டம் சஹிதம் நடைபெற்றது.
ஆதி சங்கரர் ஜெயந்தி மஹோத்ஸவமானது சம்பூர்ண கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர், ருக் மற்றும் சாம வேத பாராயணங்களுடன் இன்று கும்பகோணம் ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வேத பாடசாலையில் துவங்கியது.
வேத பாராயணம் லோகக்ஷேம சங்கல்பத்துடன் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறும்.
மே 2 அன்று பகவத்பாதாள் ஜெயந்தி பிரஹ்மாண்டமான அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆஸ்திக மஹாஐனங்களை அன்புடன் வரவேற்கிறோம். குருவருள் எல்லோரும் கிடைக்க பிரார்த்தனை