பாடசாலைகளில் வேதம் அத்யயனம் செய்யும் வித்யார்த்திகளுக்கு அவ்வப்போது நிறைய பரிக்ஷைகள் நடத்தப்படும். அதில் கடுமையான பரிக்ஷைகளும் உண்டு. அவற்றில் ஒன்று தான் ‘ஏகாகீ வக்தா ஸ்ரோதா’ எனும் பரிக்ஷை. காசி க்ஷேத்திரத்தில் இது பிரபலம். விசேஷமானது.
சமீபத்தில் திருவையாறு பிரஹ்மஸ்ரீ யக்ஞமணி தீக்ஷிதர் அவர்களின் அத்யக்ஷத்தில் அவர் பரிக்ஷை அதிகாரியாக ஆஸனத்தில் வீற்றிருக்க கும்பகோணம் ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வேத பாடசாலை அத்யாபகர் பிரஹ்மஸ்ரீ குருராம கனபாடிகளின் வித்யார்த்தி சந்திரசேகரன் இந்த ‘ஏகாகீ வக்தா ஸ்ரோதா’ பரிக்ஷையில் மிகவும் அற்புதமாக வெற்றி பெற்றார்.
வேத மாதா அனுக்ரஹம்.
