நவராத்ரி துர்காஷ்டமி அன்று சண்டி ஹோமம்

நவராத்ரியில் துர்காஷ்டமியான 30-9-2025 அன்று நமது கும்பகோணம் ஸ்ரீ மந்த்ர பீடேஸ்வரி வேத பாடசாலையில் சண்டி ஹோமம் நாம் எதிர்பார்த்ததற்கு மேல் அம்பாள் அருளால் யதோக்தமாக நன்கு நடைபெற்றது.

Chandi Homam on Durgashtami

பலரது பல விதமான உசத்தியான கைங்கர்யமும் ஹோமத்தில் முக்கிய பங்கு வகித்தது.

பலர் முன் கூட்டியே அனுப்பி வைத்த அவர்களது பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும் ஹோம சங்கல்பம் மூலம் அம்பாளிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆரோக்யம், மன நிம்மதி, உள்பட எல்லா விதமான க்ஷேமங்களும் அனைவருக்கும் கிடைக்க ஹோம சமயத்தில் அம்பாளிடம் விசேஷமாக பிரார்த்தனை செய்யப்பட்டது.

லோக க்ஷேமார்த்தமாகவும் பிரார்த்தனை அம்பாள் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கப்பட்டது.

சண்டி ஹோமத்தில் பல விதத்தில் கைங்கர்யம் செய்த அனைத்து ஆஸ்திக அன்பர்களுக்கு மீண்டும் ஒரு முறை எங்களது கிருதக்ஞதையை (कृतज्ञता) தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆரோக்யம், ஐஸ்வர்யம், மன நிம்மதி, விவாஹ பிராப்தி, படிப்பு முதலியவைகளை அருள் புரியும் சக்தி வாய்ந்த சண்டி ஹோமம் கும்பகோணம் ஸ்ரீ மந்திர பீடேஸ்வரி வேத பாடசாலையில் ஏற்பாடாகியுள்ளது.

நாள்: செவ்வாய், 30-9-2025.
நேரம்: காலை சுமார் 7.30 மணி அளவில்.

அன்பர்கள் பங்கு பெற்று பிரசாதத்தை ஸ்வீகாரம் செய்துக் கொள்ள வேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம்.

சங்கல்பத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினால் தொடர்புக் கொள்ளலாம்.

அத்யாபகர்
மற்றும்
டிரஸ்டிகள்.
88385 15265

Scroll to Top